தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரளாவில் தொடரும் படையப்பா யானையின் அட்டகாசம் - சுற்றுலாப் பயணிகள் அவதி - படையப்பாவை விரட்டிய வனத்துறையினர்

கேரள மாநிலத்தில் உள்ள மூணார் வனப்பகுதியில் படையப்பா எனும் காட்டு யானை தொடர்ந்து சாலையில் செல்லும் வாகனங்களைத் துரத்துவதும், கடைகளை உடைத்து பொருள்களை சேதப்படுத்துவதும் என அட்டகாசம் செய்து வருகிறது.

Etv Bharatகேரளாவில் தொடரும் படையப்பாவின் அட்டகாசம்
Etv Bharatகேரளாவில் தொடரும் படையப்பாவின் அட்டகாசம்

By

Published : Nov 6, 2022, 4:06 PM IST

Updated : Nov 6, 2022, 4:52 PM IST

கேரளாமாநிலம், மூணார் பகுதி சர்வதேச சுற்றுலா தலமாகத்திகழ்ந்து வருகிறது. இந்தப் பகுதியில் கடந்த சில நாட்களாக 'படையப்பா' என்னும் பெயரிடப்பட்ட காட்டுயானை மூணார் நகரில் உள்ள கடைகளில் பொருள்களை சேதப்படுத்துவதும், கடைகளை உடைப்பதுமாகவும் இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று(நவ-6) சுற்றுலாப்பயணிகள் அதிகமாக கூடும் எக்கோ பாயின்ட் என்ற இடத்தில் உள்ள சாலையில் திடீரென வந்த படையப்பா யானை, அங்கு செல்லும் வாகனங்களை துரத்துவதும், சாலையில் ஓரத்தில் இருந்த இளநீர் கடைக்குள் புகுந்து இளநீர்களை குடிப்பதுமாக இருந்தது. இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் யானையை விரட்டவும்; அங்கிருந்து படையப்பா யானை அருகில் இருந்த ஆற்றுக்குள் இறங்கி சாகவாசமாக ஆனந்தக்குளியலில் ஈடுபட்டு, பின்னர் ஆற்றை மெதுவாக கடந்து வனப்பகுதிக்குள் சென்றது.

கேரளாவில் தொடரும் படையப்பா யானையின் அட்டகாசம் - சுற்றுலாப் பயணிகள் அவதி

கடந்த சில நாட்களாக அவ்வப்போது திடீரென ஊருக்குள் புகுந்து கடைகளை சேதப்படுத்தி வரும் படையப்பா யானையினால் மூணார் பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க;உயிரைப்பறித்த கேட்; மின்சாரம் தாக்கி வயதான தம்பதி பலி!

Last Updated : Nov 6, 2022, 4:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details