தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேகமலையில் காட்டு யானை உலா – வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை! - theni district news

தேனி: மேகமலையில் பகல் நேரத்தில் குடியிருப்பு பகுதிக்கு உலா வரும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காட்டு யானை உலா
காட்டு யானை உலா

By

Published : Jan 9, 2021, 6:53 AM IST

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது.

ஏற்கனவே இந்த யானை மணலாறு, இரவங்கலாறு ஆகிய பகுதிகளில் இரண்டு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை கொன்றது.

காட்டு யானை உலா

இந்நிலையில் மீண்டும் இரவங்கலாறு பகுதியில் உள்ள குடியிருப்புகளை சேதப்படுத்தியுள்ளது. இதுவரை இரவு நேரத்தில் வந்து சென்ற யானை, தற்போது மேகமலையில் பகல் நேரத்தில் உலா வருகிறது.

இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் விரைந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: யானை தாக்கியதில் பெண் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details