தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்லையா. கடந்த 2014ஆம் ஆண்டு குடும்ப பிரச்னை காரணமாக தனது மனைவி சுமதி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொலை செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கடமலைக்குண்டு காவல் துறையினர் 2014ஆம் ஆண்டு ஜீன் 10ஆம் தேதி அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மனைவியைக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை - Husband who killed his wife sentenced to life imprisonment
தேனி: மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவனுக்கு தேனி மகளிர் நீதிமன்ற நீதிபதி கீதா ஆயுள் தண்டனையும், 10ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
கடமலைக்குண்டு காவல்துறையினருடன் குற்றவாளி
வழக்கு விசாரணை தேனி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் மனைவி மீது மண்ணெண்ணயை ஊற்றி கொலை செய்த குற்றத்திற்காக செல்லையாவிற்கு ஆயுள் தண்டனையும், 10ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.