தேனி: தேனி கைலாசப்பட்டியில் உள்ள தமிழ்நாடு முன்னாள் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச் 2) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அண்மையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது குறித்து விவாதம் நடைபெற்றது.
இதற்கு, அதிமுக பிளவுபட்டதே காரணம் என பொதுமக்கள், தொண்டர்கள் மத்தியில் பரவலாக பேச்சு எழுந்ததாக அதிமுக நிர்வாகிகள் பலரும் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனை, வருங்காலத்தில் தவிர்க்க வேண்டுமானால், பிளவுபட்ட அதிமுகவை ஒருங்கிணைப்பதுடன், சசிகலா, டிடிவி தினகரன் அவரது அமமுக கட்சியையும் இணைத்து மீண்டும் பலம் வாய்ந்த கட்சியாக அதிமுகவை உருவாக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வத்திடம் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.