தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான வெள்ளிமலை, மேகமலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மேகமலை அருவி என்றழைக்கப்படும் சின்னசுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
சின்னச் சுருளி அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்...! சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை - வெள்ளம்
தேனி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் தொடர் கனமழை காரணமாக சின்னச் சுருளி அருவியில் வெள்ளம் ஆர்பரித்து கொட்டுகிறது. இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சின்ன சுருளி அருவி
கடந்த 5 மாதங்களாக போதிய மழை இல்லாமல் வறண்டு காணப்பட்ட சின்னச் சுருளி அருவியில், தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.