தேனி: சின்னமனூர் பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு முல்லைப் பெரியாறு அருகில் உறை கிணறு அமைத்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்வது தவறு எனக்கூறி பொதுப்பணித்துறையினர் அந்த குழாய்களை கடந்த மாதம் தோண்டி அடைத்தனர்.
இதுகுறித்து விவசாயிகளின் வேண்டுகோள் கிணங்க தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு தலைவர் பி ஆர் பாண்டியன் அவர்கள் இன்று சின்னமனூர் பகுதியில் குழாய்களை தோண்டி அடைத்த பகுதியை பார்வையிட வந்திருந்தார்.
அப்பொழுது அவருடன் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பி ஆர் பாண்டியன் தலைமையில் குமுளி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின் விவசாயிகள் சாலை மறியலில் கைவிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
முல்லை பெரியாற்றில் உறை கிணறு பாசனம் தடுப்பு இதையும் படிங்க: திட்டங்களை விவசாயிகளிடம் திணிக்க வேண்டாம்... அதிகாரிகளை கடிந்து கொண்ட உயர்நீதிமன்றம்..