தேனி:தேனியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் அதிகரித்து, அதனுடைய முழு கொள்ளளவை எட்டியது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மூன்று கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், பெரியாறு பிரதான கால்வாய் பாசன வசதிக்காக வைகை அணையில் இருந்து இன்று (நவ.10) தண்ணீர் திறக்கப்பட்டது.
வைகை அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர், ஏழு மதகுகள் வழியாக ஆர்ப்பரித்து கரம் புரண்டு ஓடத் தொடங்கியது. வைகை அணையின் மொத்த உயரமான 71 அடியில் 70 அடிக்கு மேல் நிரம்பியதால் பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காக, இன்று முதல் தொடர்ந்து 45 நாட்களுக்கு 900 கன அடி நீர் திறந்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.