தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் மழை: வைகை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு! - Continued heavy rain

தொடர் மழை காரணமாக வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை: வைகை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு!
தொடர் கனமழை: வைகை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு!

By

Published : Aug 3, 2022, 12:35 PM IST

தேனி:நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி, உபரி நீர் அப்படியே ஏழு பிரதான பெரிய மதகுகள் வழியாக திறக்கப்படுகிறது.

இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், வைகை ஆற்றில் யாரும் இறங்கவோ அல்லது குளிக்கவோ கூடாது என்றும் நீர்வளத்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் கனமழை: வைகை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு!

தற்போதைய நிலவரப்படி, வைகை அணையின் நீர் இருப்பு 5,725 மில்லியன் கன அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் மேலும் அதிகரிக்கப்படும் என வைகை நீர் வளத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:நீர்வரத்து 1,45,000 கன அடியாக உயர்வு - ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு

ABOUT THE AUTHOR

...view details