தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. அதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்து முக்கிய நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது. தலையாறு, வரட்டாறு, மூலாறு பகுதியில் பெய்யும் மழைநீர் இந்த அணையில் தேங்குகிறது. 57 அடி நீர்மட்ட அளவுள்ள மஞ்சளாறு அணை நேற்று மாலையில் 55 அடியை எட்டியது.
மஞ்சளாறு நீர்மட்டம் உயர்வு இதையடுத்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து அணைக்கு வரும் 57 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. தற்போதுவரை பெய்துவரும் தொடர் மழையால் அணையின் நீர்வரத்து 585 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேலும், அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்படுவதால் கெங்குவார்பட்டி, டி. கல்லுப்பட்டி, வத்தலக்குண்டு உள்ளிட்ட தேனி, திண்டுக்கல் மாவட்ட அணையின் கரையோரப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:விடிய விடிய மழை; மகிழ்ச்சியில் விவசாயிகள்!