தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகின்றது. பெரியகுளம் ஒன்றியத்தற்குட்பட்ட ஜெயமங்கலம், வடுகபட்டி, தாமரைக்குளம், சில்வார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது முதல் போக நெல் சாகுபடி அறுவடைத் தொடங்கி, கடந்த 30 நாட்களாக நடைபெற்று வருகின்றது. இங்கு விவசாயிகள் கொண்டு வரும் சன்ன ரக நெல்லிற்கு ஆயிரத்து 905 ரூபாயும் பொதுரக நெல்லிற்கு ஆயிரத்து 850 ரூபாய் வீதமும் வழங்கி நாள்தோறும் கொள்முதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து கடந்த 30 நாட்களுக்கும் மேலாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் செய்த நிலையில், மூட்டைகள் அனைத்தும் பாதுகாப்பான நெற்கிட்டங்கிகளில் கொண்டு சேர்க்காமல் மேல்மங்கலம் பகுதியில் திறந்த வெளியில் கொட்டப்பட்டுள்ளது.