செயல் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை - லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை
தேனி: உத்தமபாளையத்தில் உள்ள அய்யம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை நடத்திவருகின்றனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பி.டி.ஆர் நகரில் வசித்துவருபவர் பாலசுப்பிரமணியம். இவர் தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூர், பண்ணைப்புரம், ஆண்டிபட்டி ஆகிய பேரூராட்சிகளில் செயல் அலுவலகராகப் பணியாற்றி பணிமாறுதல் பெற்று தற்போது திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலராகப் பணிபுரிந்துவருகின்றார்.
இந்நிலையில் தேனி லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆய்வாளர் கீதா தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் உத்தமபாளையத்தில் உள்ள பாலசுபிப்ரமணியத்தின் வீட்டில் இன்று (செப்டம்பர் 16) அதிரடி சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
பொதுமக்களிடம் லஞ்சம் பெற்றுவருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (செப்டம்பர் 16) காலையில் தொடங்கிய இந்த அதிரடி சோனை தற்போது வரை நடைபெற்றுவருகிறது. சோதனை முடிவில் பணம், ஆவணம் ஏதும் கைப்பற்றப்பட்டதா எனத் தெரியவரும்.