தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தேனி மக்களுக்கே”- விசிக - தேனி மாவட்ட ஆட்சியர்

தேனி: மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளில் தேனி மாவட்ட மக்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

விடுதலை சிறுத்தை கட்சியினர்
விடுதலை சிறுத்தை கட்சியினர்

By

Published : Aug 24, 2020, 6:41 PM IST

தமிழ்நாட்டு வேலை, தமிழக மக்களுக்கே! என்ற கோரிக்கையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று (ஆக.24) தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார்.
அதன்படி விசிக கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் வீடுகளில் வாசலிருப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் தேனி மாவட்ட விசிக கட்சியினர் திருமாளவளனின் அறிவிப்பிற்கு ஒரு படி மேல் சென்று தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தேனி மாவட்ட மக்களுக்கே! என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
முன்னதாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details