தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டப்பகலில் பள்ளியில் புகுந்து மாணவி கடத்தல்.. தேனியில் நடந்தது என்ன?

தேனியில் பள்ளி மாணவியை இரண்டு நபர்கள் கடத்திச் சென்ற சி.சி.டி.வி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

வகுப்பறையில் புகுந்து பட்டப்பகலில் கடத்தப்பட்ட பள்ளி மாணவி
வகுப்பறையில் புகுந்து பட்டப்பகலில் கடத்தப்பட்ட பள்ளி மாணவி

By

Published : Nov 25, 2022, 6:41 PM IST

தேனி: சின்னமனூரில் உள்ள சாமிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் யாஸ்மீன். இவரது தங்கை பர்வீன் பானு இறந்ததால், அவரது 8 வயது மகளான நபியா சுல்தானாவை தானே வளர்த்து வந்துள்ளார். அச்சிறுமி கருங்கட்டான் குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற மாணவியை பள்ளி வகுப்பறையில் புகுந்து தேனி ஓடை தெருவை சேர்ந்த முகமது ஆரிப் மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரும் பட்டபகலில் ஆசிரியரை தாக்கி விட்டு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளனர்.

ஆசிரியர்கள் தடுத்தும் குழந்தையை கடத்திச் சென்ற இருவர் மீது காவல் நிலையத்தில் பள்ளி நிர்வாகமும், உறவினர்களும் புகார் அளித்துள்ளனர். புகாரினை பெற்றுக் கொண்ட போலீசார் மாணவியை கடத்திச் சென்றவர்கள் மீது மூன்று நாட்களாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், குழந்தையையும் கண்ணில் காட்டாமல் அலட்சியப் போக்கில் நடந்து கொள்வதாக காவல் நிலையத்திற்கு சென்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வகுப்பறையில் புகுந்து பட்டப்பகலில் கடத்தப்பட்ட பள்ளி மாணவி

இந்நிலையில் பள்ளிக்குள் புகுந்து சிறுமியை கடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலி மாணவி தற்கொலை முயற்சி - போலீஸ் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details