தேனி: ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் மலைப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலை குடிநீருக்காக கீழிறங்கிய 6 வயது கரடியை 3 நாய்கள் விரட்டியதால் மாரிமுத்து என்ற விவசாயியின் வீட்டிற்குள் புகுந்தது.
இதனை கூண்டு வைத்து பிடிக்க நேற்று காலை முதலே ஆண்டிப்பட்டி வனச்சரகர் அருள் தலைமையிலான வனத்துறையினர் முயற்சி செய்தனர். கரடியை பிடிக்கும் முயற்சி பலன் அளிக்காததால் சிறப்பு வன உயிரின மருத்துவர் கலைவாணன் வரவழைக்கப்பட்டு ஜன்னல் வழியாக வெடி வைத்து கூண்டிற்குள் கொண்டு வரப்பட்ட கரடிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.