தேனி:சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவு எட்டி ஏற்கனவே உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், பெரியகுளம் பகுதியில் உள்ள கல்லாறு, கும்பக்கரை ஆறு, செலும்பாறு, உள்ளிட்ட ஆறுகளில் வரும் நீர் பெரியகுளம் வராக நதி ஆற்றில் கலந்து செல்வதால் மாலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சோத்துப்பாறை அணையில் இருந்து வெளியேறும் நீர் மற்றும் கிளை ஆறுகளான கல்லாறு, கும்பக்கரை ஆறு, செல்லும்பாறு உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நீர் அனைத்தும் வராக நதி ஆற்றில் கலக்கும் பொழுது 1000 கன அடிக்கும் மேல் வராக நதி ஆற்றில் நீர் செல்லும் நிலை உள்ளது.