தேனி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில், 12ஆம் வகுப்பு முடித்து மேற்படிப்பு கற்க வசதி இல்லாமல் தவிக்கின்ற ஏழை மாணவர்களுக்கு, வைரமுத்து கல்வி அறக்கட்டளை சார்பில், ஒவ்வொரு வருடமும் கல்வி நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான நிதி உதவி வழங்கும் விழா பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து ஐந்து மாணவர்களுக்குக் கல்வி நிதி உதவியாக தலா 20ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். பின்னர் பேசிய அவர், ஜாதி, மதம், மொழி, இனம், இடம் எனப் பிரிந்து கிடந்த மனிதனை கடவுள், இயற்கை, என எதுவும் ஒன்று சேர்க்கவில்லை. பிரிந்து கிடந்த மனிதனை ஒன்று சேர்த்திட வந்த மந்திரம் கல்வி என்கிற கருவி தான் என்பதை இந்த மண் மறந்து விடக்கூடாது. கல்வியால் மட்டுமே நாம் அனைவரும் ஒன்றிணைய முடியும் என முன்னோர்கள் வகுத்தார்கள்.