தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் ஏழுமலையான் விக்கிரகங்களுக்கு சிறப்பு பூஜைகள் - இந்து நாடார் குழும கல்வி நிலையங்கள்

தேனியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட ஏழுமலையான் விக்கிரகங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தபட்டன.

திருப்பதியிலிருந்து கொண்டு வரப்பட்ட ஏழுமலையான் சிலைக்கு தேனியில் சிறப்பு பூஜை
திருப்பதியிலிருந்து கொண்டு வரப்பட்ட ஏழுமலையான் சிலைக்கு தேனியில் சிறப்பு பூஜை

By

Published : Jan 2, 2023, 7:23 AM IST

தேனி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் அன்னமார்ச்சார்யா இசைக்குழு மற்றும் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் குழும கல்வி நிலையங்கள் சார்பாக தேனியில் உள்ள நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைபள்ளியில் 7ஆம் ஆண்டு ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி பெரு விழா நடைபெற்றது

தேனியில் சிறப்பு பூஜை

திருப்பதி ஏழுமலையான கோயிலில் உள்ளது போலவே திருப்பதி ஏழுமலையான் சிலையும், அதன் முன்பு திருப்பதியில் இருந்து கொண்டு வரப்பட்ட பத்மாவதி தாயார் மற்றும் ஏழுமலையான் மற்றும் அலுமேலு அம்மாள் சிலைகளும் பொதுமக்களின் காட்சிக்கு வைக்கபட்டன

இதில் பெருமாளுக்கு புன்யாவதனம் அலங்காரமும், அர்ச்சனா, புஷ்பாஞ்சலி,சங்கல்பம் நடைபெற்றது. பின்னர் அன்னமார்ச்சர்யா இசைக்குழுவினரின் பக்தி இசைக்கஞ்சேரிகள் நடத்தபட்டன. இதனிடையே மாணவிகளின் நாட்டியாஞ்சலியும் நடைபெற்றன. இறுதியில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமும்,பெரிமாள் புகைபடமும், ஆன்மீக புத்தகங்களும் இலவசமாக வழங்கபட்டன. இந்த பூஜைகளின்போது ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:NEW YEAR 2023: சுருளி அருவியில் குளித்து புத்தாண்டை கொண்டாடிய மக்கள்

ABOUT THE AUTHOR

...view details