தேனி மாவட்டம் கம்பம் பகுகியைச் சேர்ந்த ஈஸ்வரன், பாரதி ஆகிய இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டு கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருமணம் செய்வதாகக் கூறி 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! - theni
தேனி: கம்பம் பகுதியில் திருமணம் செய்வதாகக் கூறி 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
two-youth-arrested-under-the-pocso-act-in-theni
இது தொடர்பான விசாரணை தேனி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் இறுதி தீர்ப்பான இன்று, குற்றவாளிகள் இருவருக்கும் பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், அபராதம் கட்டத்தவறினால் ஆறு மாதம் கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்கக்கூடும் என்று நீதிபதி கீதா தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து குற்றவாளிகள் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.