தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தர்மலிங்காபுரம் சாலையில், எதிர்த்திசையில் தேனியிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்தின் மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி நேற்று (நவ.4) விபத்துக்குள்ளாகியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஆண்டனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த ரங்கசாமி, அறிவழகன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
தற்போது, உயிருக்கு ஆபத்தானநிலையில் இருவரையும் மீட்ட காவல் துறையினர், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.