தமிழ்நாடு-கேரள எல்லைப்பகுதியில் 2 மாநில காவலர்கள் சோதனை - திருவோணம்
தேனி: ஓணம் பண்டிகையை முன்னிட்டு போதைப்பொருள்கள் கடத்தலை தடுப்பதற்காக குமுளி எல்லைப்பகுதியில் இரு மாநில காவல் துறையினர் இணைந்து சோதனை நடத்தினர்.
கேரளாவில் தற்போது ஓணம் பண்டிகை தொடங்கி உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு - கேரள எல்லையோரப் பகுதிகளான தேனி மாவட்டம் கம்பம் மெட்டு, மந்திப்பாறை, மூங்கிப்பள்ளம், குமுளி போன்ற பகுதிகள் வழியாக அனுமதியின்றி போலி மது, கஞ்சா, எரிசாராயம், போதைப்பொருள் கடத்துவதைத் தடுப்பது தொடர்பாக இடுக்கி மாவட்ட கலால் துறை இணை ஆணையர் பிரதீப், தேனி காவல் கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் சங்கரன் நடத்திய ஆலோசனையின்பேரில் எல்லைப்பகுதியில் இரு மாநில காவல் துறையினர் இணைந்து சோதனை நடத்த முடிவுசெய்தனர்.
அதன்படி, நேற்று (ஆகஸ்ட் 27) உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் காயத்ரி, உடும்பன்சோலை கலால் துறை சரக ஆய்வாளர் சந்தோஷ்குமார் தலைமையில் இரு மாநில கலால் துறை, காவல் துறை, வனத் துறையினர் இணைந்து குமுளி வனப்பகுதியில் சோதனை நடத்தினர்.