தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் அரசு மருத்துவமனை, நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், கோட்டாட்சியர் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலர்களின் குடியிருப்புகள் உள்ளன.
தீயணைப்பு துறை வீரர்கள் பாம்பை பிடிக்கும் போது இந்நிலையில், பெரியகுளம் கோட்டாட்சியர் குடியிருப்பு பகுதியில் இரண்டு பாம்புகள் நுழைந்தன. இதைக்கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து, இது குறித்து பெரியகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பிடிபட்ட இரண்டு சாரை பாம்புக்ள் இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், குடியிருப்பு வளாகத்தில் புகுந்த பாம்புகளை தீவிரமாகத் தேடி வந்தனர். அப்போது திடுக்கிடும் வகையில் இரண்டு பாம்புகள் ஊர்ந்து சென்றது. அதை பார்த்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு சாரை பாம்புகளையும் உயிருடன் பிடித்தனர்.
கோட்டாட்சியர் குடியிருப்பில் நுழைந்த பாம்புகள் இவற்றில் ஒரு பாம்பு எட்டு அடி நீளமும், மற்றொன்று 10 அடி நீளம் இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கபட்டு பிடிபட்ட பாம்புகளை அவர்களிடம் ஒப்படைக்கபட்டது. மேலும் அரசு அலுவலர்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்த பாம்புகளால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.