தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓசூர் தொழிலதிபர் கொலை வழக்கு - இருவர் பெரியகுளம் நீதிமன்றத்தில் சரண்! - two person surrender in periyakulam who involved in hosur business women murder case

கிருஷ்ணகிரி: ஓசூர் தொழிலதிபர் கூலிப்படையினரால் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவர் பெரியகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

ஓசூர் தொழிலதிபர் கொலை வழக்கு  ஒசூர் தொழிலதிபர் கொலை  ஓசூர் கொலை வழக்கு  மதுரை கூலிப்படையினர்  hosur women murder  hosur bussiness women murder case  two person surrender in periyakulam who involved in hosur business women murder case  கிருஷ்ணகிரி கொலை வழக்கு
two person surrender in periyakulam who involved in hosur business women murder case

By

Published : Nov 27, 2019, 11:09 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த 11ஆம் தேதி தொழிலதிபர் நீளம்மாள் என்பவர், பெட்ரோல் குண்டு வீசிக் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டார். மதுரையைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவருடன் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக உத்தனப்பள்ளி காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

இந்நிலையில், இக்கொலை வழக்கில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த பொன்னகரம் பகது ராமகிருஷ்ணன்(29) மற்றும் நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த அம்பலவாணன்(24) ஆகியோர் இன்று தேனிமாவட்டம் பெரியகுளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி அருண்குமார் முன்னிலையில் சரணடைந்தனர்.

ஓசூர் தொழிலதிபர் கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் பெரியகுளம் நீதிமன்றத்தில் சரண்

இருவரையும் கிருஷ்ணகிரி மாவட்ட நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தும்படி காவல் துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, இருவரும் பாதுகாப்பாக கிருஷ்ணகிரி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க : மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் கஞ்சா செடி!

ABOUT THE AUTHOR

...view details