தேனி மாவட்டம் போடி அருகே உள்ள டொம்புச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் மாரிமுத்து (35), காளியப்பன் (55), பழனிச்சாமி (60). ஏலத்தோட்ட கூலித் தொழிலாளிகளான இவர்கள், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தனியார் தோட்டத்தின் வேலைக்காக இன்று (பிப். 9) சென்றுள்ளனர். வழக்கம்போல பணி முடிந்து ஒரே இருசக்கர வாகனத்தில் மூவரும் பயணம்செய்துள்ளனர்.
போடிமெட்டு மலைச் சாலையில் முந்தலுக்கு மேல் உள்ள முதலாவது கொண்டை ஊசி வளைவில் வந்துகொண்டிருந்தபோது, அவர்கள் வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காளியப்பன், பழனிச்சாமி ஆகிய இரு முதியவர்களும் படுகாயம் அடைந்தனர். மாரிமுத்துவிற்கு லேசான காயமும் ஏற்பட்டது.