தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆண்டிப்பட்டி அருகே இடி தாக்கி இருவர் உயிரிழப்பு - ஒருவர் படுகாயம்! - காவல்துறை விசாரணை’

தேனி: ஆண்டிப்பட்டு அருகே மிளகாய் தோட்டத்தில் வெலை செய்துகொண்டிருந்த இரண்டு பெண்கள் இடி தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

two-killed-one-injured-in-lightning-strike-near-andipatti
two-killed-one-injured-in-lightning-strike-near-andipatti

By

Published : Sep 17, 2020, 7:31 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேவுள்ள கண்டமனூரைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள், அரப்படித்தேவன்பட்டியில் உள்ள தவசி என்பரது மிளகாய் தோட்டத்திற்கு இன்று (செப்.17) வேலைக்கு சென்றனர்.

அப்போது அங்கு மழை பெய்ததால் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த பெண்கள், அருகிலிருந்த மரங்களுக்கு கீழ் நின்றனர். அச்சமயம் இடி தாக்கியதில் கண்டமனூர் பகுதியைச் சேர்ந்த வெள்ளியம்மாள் (47), போதுமணி (34) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இதில் படுகாயமடைந்த நாகம்மாள் என்பவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கானா விலக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் இடி தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ராஜஸ்தான் படகு விபத்து: 5 பேர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details