தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏலத்தோட்ட வேலைக்குச் சென்ற வாகனம் விபத்து - இருவர் உயிரிழப்பு! - Two killed as workers' vehicle crashes near Munnar

தேனி: மூணாறு அருகே ஏலத்தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளர்களின் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

kerala labours jeep vechile accident

By

Published : Nov 24, 2019, 2:43 PM IST


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ஏலத்தோட்டத்திற்கு வெளியூரிலிருந்து தொழிலாளிகள் வேலைக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலை சூரியநெல்லி அருகே உள்ள பைசன்வாலியில் இருந்து முத்துக்காடு பகுதிக்கு வேலைக்காக 14 பேர் ஜீப்பில் சென்றுள்ளனர். திடீரென்று இந்த வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே சூரியநல்லி பகுதியைச் சேர்ந்த கார்த்திகா, அமலா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் தேனி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதி

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 12 நபர்கள் ராஜகுமாரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்களுள் ஐந்து நபர்கள் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கேரள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

தனியார் நிறுவன உரிமையாளர் கொலை - வடமாநிலத் தொழிலாளர்களுக்கு தொடர்பா?

ABOUT THE AUTHOR

...view details