தேனி மாவட்டம் பழனிச்செட்டிபட்டியைச் சேர்ந்த ஜெயராமன் தனது மனைவி ராஜலட்சுமியுடன் வீட்டில் இருந்து பெரியகுளம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது கைலாசபட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, கம்பத்தில் இருந்து பெரியகுளம் நோக்கி சென்ற அரசு பேருந்து இருசக்கர வாகனத்தை முந்தி செல்ல முயன்றது. இதில் எதிர்பாராத விதமாக முன்னே சென்ற இருசக்கர வாகனத்தில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன், மனைவி கீழே விழுந்ததில் ஜெயராமனின் மனைவி ராஜலட்சுமி(45) அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார். இந்த விபத்தில் ஜெயராமன் தலைகவசம் அணிந்திருந்ததால் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். இதுகுறித்து தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் போடிநாயக்கனூர் அருகே உள்ள ராசிங்காபுரத்தைச் சேர்ந்த பூபதிராஜா(20) தனது தாய் முருகேஸ்வரியுடன் இருசக்கர வாகனத்தில் தேனி நோக்கி வந்து கொண்டிருந்தார்.