தேனி: பண்ணைபுரத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகள் நிகிதா ஸ்ரீ (7), பண்ணைப்புரம் கரியம்பட்டி ஜெகதீசன் என்பவரின் மகன் சுபஸ்ரீ (6) இரு குழந்தைகளும் நேற்று (செப்.29) பண்ணைப்புரம் பாவலர் தெருவில் உள்ள அரசு பொதுக் கழிப்பறை தொட்டியின் மேல் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது தொட்டியின் மேல், மூடி வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கல் திடீரென உடைந்து இரண்டு குழந்தைகளும் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்துள்ளனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தொட்டிக்குள் விழுந்த குழந்தைகளையும் மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.
மேலே கொண்டு வந்த இரு குழந்தைகளில் நிகிதா ஸ்ரீ சம்பவ இடத்திலே உயிரிழந்தார். சுப ஸ்ரீயை உடனே உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். செல்லும் வழியில் அந்த குழந்தையும் உயிரிழந்தது.