அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் நேற்று காலை உயிரிழந்தார். பெருங்குடி தனியார் மருத்துவமனையில் இருந்த விஜயலட்சுமியின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஓபிஎஸ் மனைவி மறைவு - டிடிவி தினகரன் நேரில் அஞ்சலி
தேனி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ttv dhinakaran
இதற்கிடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சசிகலா உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சென்று விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி; ஓபிஎஸ்ஸுக்கு ஆறுதல் கூறினார்.