தேனி:பெரியகுளம் அருகே கொடைக்கானல் மலைச்சாலையில் உள்ள டம் டம் பாறை பகுதியில் மதுரையில் இருந்து கொடைக்கானல் நோக்கி சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் பாலமுருகன் மற்றும் கிளீனர் மோகன் லாரி கவிழ்ந்த போது லாரியில் இருந்து தாவி மரக்கிளைகளை பிடித்து தொங்கி அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மரக்கிளையை பிடித்து உயிர் தப்பிய இருவரையும் கயிறுகள் மூலம் கீழே இறக்கி 200 அடி பள்ளத்திலிருந்து கொண்டு வந்தனர்.