இடுக்கி (கேரளம்):கேரளத்தில் 1964 மற்றும் 1993 நில விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும், பல்வேறு நிபந்தனைகளுடன் விதிக்கப்பட்டுள்ள கட்டுமானத் தடையை திரும்பப் பெற வேண்டும், நில உரிமைப் பட்டா வழங்குவதை மீண்டும் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடுக்கி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் இன்று (ஆகஸ்ட் 18) நடைபெற்றது.
இடுக்கி மாவட்டம் வனவிலங்கு சரணாலயம் அமைப்பதற்காக அப்பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் வசித்து வருபவர்களை காலி செய்யும்படி பிறப்பித்த உத்தரவிற்கு அப்பகுதியினரிடையே கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இடுக்கி மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சிகளில் கட்டுமானப் பணிகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், 2019ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட கட்டுமானப் பணி சார்ந்த நிபந்தனைகள், பூமி நிலங்கள் பதிவு சம்பந்தப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளிட்டவைகளை தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:குழந்தை பிறந்த பின் முதல் முறையாக தன் துணைவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை இலியானா
மேலும், பொதுமக்கள் வசித்து வரும் பகுதிகளில் வனவிலங்கு தாக்குதலில் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரியும், நீண்ட காலமாக பொதுமக்கள் வசித்து வரும் பகுதிகளில் வனத்துறை விதிக்கும் கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நில சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை வைத்து இன்று அம்மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது.