தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்று, கம்பம் அருகே உள்ள சுருளி அருவி. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காகவும், வீடுகள் மற்றும் கோயில்களுக்கு தேவையான புனித நீர் எடுப்பதற்காகவும் மற்றும் குளிப்பதற்காகவும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலத்தில் இருந்தும் வந்து செல்கின்றனர்.
சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை! - Suruli Falls
சுருளி அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
இந்த நிலையில் நேற்று (ஜன.23) இரவு பெய்த கனமழையால் சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, சுருளி அருவியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதையும் படிங்க:தென்காசியில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதா? - நீதிமன்றம் கேள்வி