தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனி தக்காளிக்கு மவுசு அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி! - TOMATTO PRODUCTION

தேனி: ஆந்திரா தக்காளி வரத்து நின்றதால், தேனி மாவட்ட தக்காளிக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தக்காளிக்கு மவுசு அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி!

By

Published : May 4, 2019, 3:46 PM IST

தேனி மாவட்டத்தில் கொடுவிலார்பட்டி, அம்பாசமுத்திரம், கோவிந்த நகரம், கண்டமனூர், ஜி.உசிலம்பட்டி, ராஜகோபாலன் பட்டி, பாலக்கோம்பை, ஆண்டிபட்டி உள்ளிட்ட இடங்களில் தக்காளி சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. இங்கு விளைகின்ற தக்காளிப் பழங்கள் தேனி, ஒட்டன்சத்திரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இதனிடையே ஆந்திராவில் இருந்தும் அதிக அளவில் தக்காளி இறக்குமதி செய்யப்பட்டுவந்தன. இதன் காரணமாக தேனி மாவட்ட தக்காளி விளைச்சலுக்கு மவுசு குறைந்து விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

தக்காளிக்கு மவுசு அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி!

இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஆந்திர மாநிலத்திலிருந்து வந்து கொண்டிருந்த தக்காளி வரத்து நின்றதால் உள்ளூர் தக்காளி விளைச்சலின் தேவை ஏற்பட்டது. இதனால் தேனி மாவட்டத்தில் தக்காளி கொள்முதல் செய்வதில் வியாபாரிகள் ஆர்வம் காட்டத் தொடங்கினர். தற்போது 20 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி தக்காளியின் விலை ரூபாய் 350 வரை கொள்முதல் ஆகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details