தேனியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, பணம் பாதாளம் வரை பாயும் என்ற பழமொழி தேனி நாடாளுமன்றத் தொகுதியில் நிரூபணமாகியுள்ளது. அந்தளவிற்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர், அண்ணன் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிப் பெற்றிருந்தால் கூட நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஆனால் அதிமுக எப்படி வெற்றி பெற்றது. எங்கள் கட்சியை சாதிக் கட்சி என்று கூறுகின்றனர்.
'பணம் பாதாளம் வரை செல்லும் பழமொழி நிரூபணம்' - தங்க. தமிழ்செல்வன் - theni
தேனி: "பணம் பாதாளம் வரை பாயும் என்பது தேனி நாடாளுமன்றத் தேர்தலில் நிரூபணமாகியுள்ளது" என்று, அமமுக வேட்பாளர் தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
என்றுடைய சமுதாயம் அதிகம் உள்ள பகுதிகளில் கூட எனக்கு அதிக வாக்குகள் கிடைக்கவில்லை. இந்து, இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என அனைவரும் பணத்தை வாங்கிக்கொண்டு அதிமுகவிற்கு வாக்களித்துள்ளனர். அதற்காக அவர்களை நான் குறை கூறவில்லை. மோடியின் ஆசியுடன் எடப்பாடியை ஒதுக்கிவிட்டு மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆவார். அதில் எந்த மாற்றமும் இல்லை.
எங்கள் கட்சியை வெறுத்து மக்கள் வாக்களிக்காமல் இல்லை. பாஜக கூட்டணி வரக்கூடாது என்றுதான் திமுகவிற்கு வாக்களித்துள்ளனர். புதிதாக அறிவிக்கப்பட்ட பரிசுப்பெட்டி சின்னம் எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் மட்டுமல்ல... இந்தியா முழுவதும் தேர்தல் ஆணையம் செயல்படவில்லை, என்றார்.