தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபத்தில்  சிக்கி ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த நடத்துனர் - தேனி ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ்

தேனி: அரசு போக்குவரத்து கழக நடத்துனர் ஒருவர் விபத்தில் சிக்கி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு செயல்பட முடியாத நிலையிலும், தேனியிலிருந்து  பெரியகுளத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் வந்து வாக்களித்துள்ளார்.

SURGERY PATIENT POLL

By

Published : Apr 18, 2019, 6:57 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் முபாரக் அலி. அரசு போக்குவரத்து கழக நடத்துனராக பணியாற்றி வரும் இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்து செல்லும் பொழுது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் இவருடைய கால் முறிந்தது. இதனையடுத்து சிகிச்சைக்காக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும் நேற்று அவருடைய கால் முறிவிற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று நடைபெற்ற தேர்தல் வாக்குப் பதிவில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என முடிவு செய்து தேனி தனியார் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார். ஜனநாயக கடமையாற்றியது தனக்கு மகிழ்ச்சியை தருவதாக முபாரக் அலி தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details