தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓ.பி எஸ் மகனுக்கு இவ்வளவு சொத்தா?

தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவிந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அவர் வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். இதில் அவரது சொத்து மதிப்புகள் விவரங்கள் மற்றும் குற்ற வழக்குகள் குறித்த விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதன் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ரவிந்திரநாத்குமார்

By

Published : Mar 23, 2019, 6:36 PM IST

Updated : Mar 23, 2019, 10:35 PM IST

அந்த சொத்து மதிப்பில், தனது கையில் ரொக்கமாக 82 ஆயிரத்து 714 ரூபாயும், தனது மனைவியிடம் 62 ஆயிரத்து 450 ரூபாய் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

வங்கி கணக்குகளில்;

  • சென்னை மந்தைவெளி சிட்டி யூனியன் வங்கியில் 14 லட்சத்து 73 ஆயிரத்து 63 ரூபாய்.
  • பெரியகுளம் சிட்டி யூனியன் வங்கியில் 24 லட்சத்து 99 ஆயிரத்து 410 ரூபாய்
  • மனைவிக்கு பெரியகுளம் ஐசிஐசிஐ வங்கிக் கிளையில் 41 ஆயிரத்து 307 ரூபாய்
  • மகன் ஜெய்தீப் பெயரில் சென்னை மந்தைவெளி சிட்டி யூனியன் வங்கி கிளையில் ஒரு லட்சத்தி 63 ஆயிரத்து 153 ஒரு ரூபாய்.
  • மகள் ஜெயஸ்ரீ பெயரில் அதே கிளையில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 67 ரூபாய்
  • ரிலையன்ஸ் மணியில் 56 ஆயிரத்து 300 ரூபாய்
  • விஜயானந்த டெவலப்பர்ஸ் பிரைவேட் நிறுவனத்தில் 33 ஆயிரத்து 340 ரூபாய் பங்குகள்
  • பஞ்சாப் நேஷனல் வங்கியில் மீட்டர் இன்சூரன்ஸில் 8 லட்சத்து 89 ஆயிரத்து 575 ரூபாய்
  • 6 லட்சத்து 37 ஆயிரத்து 992 ரூபாய் மதிப்புள்ள ஹூண்டாய் ஐ-10 கார்
  • 36 லட்சத்து 52 ஆயிரத்து 450 ரூபாய் மதிப்புள்ள டயோட்டா கார்.

தங்கங்களின் விவரம்

  • 120 கிராம் தங்கமும் 1.1 கிலோ வெள்ளி
  • மனைவி பெயரில் 76வது கிராம் தங்கம் 4.75 கிலோ வெள்ளி 10 கேரட் வைரம்.
  • மகன் ஜெய்தீப் பெயரில் 120 கிராம் தங்கம்
  • மகள் ஜெயஸ்ரீ பெயரில் 300 கிராம் தங்கம்
  • மகன் ஆதித்யா பெயரில் 120 கிராம் தங்கம்.
  • ரவீந்திரநாத் குமாரிடம் இருக்கும் அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு 4 கோடியே 16 லட்சத்து 27 ஆயிரத்து 24 ரூபாய்.
  • மனைவி பெயரில் 31 லட்சத்து 58 ஆயிரத்து 506 ரூபாய்.
  • மகன் ஜெய்தீப் பெயரில் 5 லட்சத்து 23 ஆயிரத்து 256 ரூபாய்.
  • மகள் ஜெயஸ்ரீ பெயரில் 10 லட்சத்து 60 ஆயிரத்து 67 ரூபாய்.
  • மகன் ஆதித்யா பெயரில் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அசையா சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

நிலம்

இது போக, விவசாய நிலமாக ரவீந்திரநாத் குமாரிடம் பெரியகுளம் மற்றும் தாமரை குளம் ஆகிய கிராமங்களில் 31.37 ஏக்கர் நிலம். அனைத்தும் 2011 ஆம் ஆண்டு வாங்கப்பட்டதாகவும், அந்த நிலத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கட்டுமானம் செய்திருப்பதாகவும் தற்போது அதன் மதிப்பு தோராயமாக ஒரு கோடியே 90 லட்சத்து 73 ஆயிரத்து 136 ரூபாய் எனவும் தனக்கு பூர்வீக சொத்து இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கடன்

வங்கிகள் மற்றும் தனிநபர்கள் இடம் வாங்கிய கடன் மற்றும் செலுத்த வேண்டிய தொகை 3 கோடியே 28 லட்சத்து 34 ஆயிரத்து 79 ரூபாய். தனது தம்பி பிரதீப்புக்கு 33 லட்சத்து 3 ஆயிரத்து 131 56 ரூபாய். தனது தாய் விஜயலட்சுமிக்கு 83 லட்சத்து பத்தாயிரம் ரூபாயும் கடன். என மேற்கண்ட தகவல்களை வேட்பு மனுவில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Last Updated : Mar 23, 2019, 10:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details