தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் உள்ள கீழப்புதுத்தெருவைச் சேர்ந்தவர் அம்மமுத்து (52). நெசவுத் தொழிலாளியான இவர் தனது உறவினர் முனியாண்டி என்பவரின் ஈமச்சடங்கிற்காக ஏப்ரல் 29ஆம் தேதி வைகை அணைப்பகுதிக்குச் சென்றுள்ளார்.
ஈமச்சடங்கிற்காக வைகை ஆற்றில் இறங்கிய முதியவர் மரணம் - VAIGAI DAM
தேனி: ஆண்டிபட்டி அருகே ஈமச்சடங்கிற்காக வைகை ஆற்றில் இறங்கிய முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
![ஈமச்சடங்கிற்காக வைகை ஆற்றில் இறங்கிய முதியவர் மரணம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3144411-thumbnail-3x2-old.jpg)
அப்போது வைகை ஆற்றில் இறங்கிய அவர், அணையின் தடுப்பணைப் பகுதியில் எதிர்பாராதவிதமாக சிக்கி நீரில் மூழ்கினார். அவரைக் காப்பாற்ற உடனிருந்தவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதற்கிடையே தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் வருவதற்குள் நீரில் மூழ்கிய முதியவர் உயிரிழந்தார்.
முதியவரின் உடலை மீட்ட வைகை அணை காவல் துறையினர், உடற்கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஈமச்சடங்கிற்காக சென்ற முதியவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.