தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இழப்பீடு தொகை வழங்காததால் பேருந்து பறிமுதல் - COURT ORDER

தேனி: நீதிமன்ற உத்தரவுபடி இழப்பீடு தொகை வழங்கப்படாததால் அரசு பேருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிகழ்வு தேனியில் நடந்துள்ளது.

பேருந்து பறிமுதல்

By

Published : Apr 27, 2019, 11:18 PM IST

கடந்த 2015ஆம் ஆண்டு பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்த மாடசாமி என்பவர் தனது காரில் திண்டுக்கல் மாவட்டம் பழனி சென்ற போது, அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த மாடசாமி சம்பவ இடத்திலே பலியானர்.

விபத்திற்கான இழப்பீட்டு தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் எனக்கோரி உயிரிழந்த மாடசாமியின் குடும்பத்தினர் பெரியகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் 16 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை இறந்தவரின் குடும்பத்திற்கு வழங்கிட வேண்டும் என நீதிபதி திலகம் உத்தரவிட்டார். ஆனால், இந்த இழப்பீடு தொகை வழங்கப்படாததால், அரசுப் பேருந்தை ஜப்தி செய்து நடவடிக்கை எடுத்திட நீதிபதி உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் நீதிமன்ற அமீனா ரமேஷ் மற்றும் வழக்கறிஞர்கள் இன்று பெரியகுளம் அரசு பேருந்து பணிமனைக்கு வந்த அரசு பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details