தற்போது கோடைகாலத்தில் வெப்பம் அதிகரித்துக் காணப்படுவதால், மலைப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்பட்டுவருகின்றன. இதனைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் வனத்துறை ஊழியர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிவருகின்றனர்.
இந்நிலையில், காட்டுத்தீயை அணைக்க முற்படும் வனத்துறை ஊழியர்களுக்கான சீருடை, காலணிகள், தீத்தடுப்பு சாதனங்கள் ஆகியவற்றை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் அருகே வண்ணாத்தி பாறை பகுதியில் உள்ள சுருளியாறு மின்நிலையத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை, கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில்2018ஆம்ஆண்டுயானை மிதித்து உயிரிழந்த தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த வனத் துறை உயர் அலுவலரான மணிகண்டன் நினைவாகத் தொடங்கப்பட்ட 'ஆல் இந்தியா பாரஸ்ட் வெல்ஃபேர் அசோசியேஷன்' ஒருங்கிணைத்தது.
இதில், சுமார் 75-க்கும் மேற்பட்ட வன ஊழியர்களுக்கு இலவச சீருடை, காலணி, தீத்தடுப்பு சாதனங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், தேனி மாவட்ட வனத்துறை உயர் அலுவலர்களும், மறைந்த மணிகண்டனின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.
தீயணைப்பு வீரர்களுக்கு இலவச சீருடை வழக்கும் காட்சி