தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, வடுகப்பட்டி மற்றும் பெரியகுளம் ஆகிய பகுதிகளில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் மற்றும் பெரியகுளம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் மயில்வேல் ஆகியோரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிராபாகரன் பரப்பரையை மேற்கொண்டார்.
அதிமுக கூட்டணியை சீண்டிய துரைமுருகன் இப்போது அனுபவிக்கிறார் - விஜயபிரபாகரன் காட்டம்! - vijaykanth son vijayprabhakar
தேனி: தூங்கிக் கொண்டிருந்த துரைமுருகன் அதிமுக கூட்டணியை சீண்டியதால் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிராபாகரன் கூறியுள்ளார்.
அதிமுக கூடணியை சீட்டிய துரைமுருகன் இப்போது அனுபவிக்கிறார் -விஜயபிரபாகரன் காட்டம்!
அப்போது அவர் பேசுகையில், ”விஜயகாந்த்தை தொட்டவர்கள் கெட்டார்கள் என்பதுபோல், தூங்கிக் கொண்டிருந்த துரைமுருகன் எங்களது கூட்டணியை சீண்டியதால் தற்போது வருமானவரிச் சோதனையில் சிக்கியுள்ளார். அவர் இன்னும் நிறைய பின்விளைவுகளை அனுபவிப்பார். வீட்டில் அரிசி மூட்டைகளை அடுக்கி வைப்பதுபோல், திமுகவினர் வீட்டில் 2ஜியில் கொள்ளையடித்த பணத்தை மூட்டை, மூட்டையாக குவித்து வைத்துள்ளனர்” என்றார்.