தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தேனி வேட்பாளர்கள் அஞ்சலி - Accident near bodi

தேனி: போடி அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு கட்சி வேட்பாளர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்தவர்களுக்கு வேட்பாளர்கள் ஆறுதல்

By

Published : Apr 8, 2019, 8:04 PM IST

தேனி மாவட்டம் போடி அருகே தீர்த்தத்தொட்டி எனும் இடத்தில் வேனும் தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேன் உருக்குலைந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

விபத்தில் இறந்வர்களின் உடல்கள் நேற்றிரவு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு தேனி அல்லிநகரம் நகராட்சி மின்மயனாத்தில் தகனம் செய்யப்பட்டது. அங்கு வந்த அதிமுக வேட்பாளர்கள் ரவீந்திரநாத் குமார், மயில்வேல், திமுக வேட்பாளர் சரவணக்குமார் மற்றும் அமமுக வேட்பாளர் கதிர்காமு ஆகியோர் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். முன்னதாக, நேற்று தேனியில் நடைபெற்ற பரப்புரையின் போது உயிரிழந்தவர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மௌன அஞ்சலி செலுத்தினார்.

போடி அருகே விபத்து; உயிரிழந்தவர்களுக்கு வேட்பாளர்கள் அஞ்சலி

ABOUT THE AUTHOR

...view details