தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முல்லைப் பெரியாறில் புதிய அணை?.. ‘தமிழ்நாடு தன் உரிமையை விட்டு தராது’ - அமைச்சர் ஐ. பெரியசாமி - in Mullai Periyar Dam

'முல்லைப் பெரியாரின் குறுக்கே புதிய அணைக் கட்டுவதாக கேரளா அரசு கூறும் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு தன் உரிமையை விட்டுக் கொடுக்காது' என்றும் இந்த விவகாரத்தில் 'முதலமைச்சர் ஸ்டாலின் தகுந்த நடவடிக்கை எடுப்பார்' என்றும் அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 15, 2023, 9:41 PM IST

முல்லைப் பெரியாறில் புதிய அணை? தமிழ்நாடு தன் உரிமையை விட்டு தராது - அமைச்சர் ஐ.பெரியசாமி

தேனி: கூடலூர் அருகே லோயர் கேம்பில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்தில் பென்னிகுயிக் அவர்களின் 182வது பிறந்தநாள் விழாவையொட்டி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவரது சிலைக்கு மாலை அணிவித்து இன்று (ஜன.15) மரியாதை செலுத்தினார்.

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை (Mullaperiyar Dam) ஆங்கில கட்டடப் பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் பிறந்த நாள் விழா (Colonel John Pennycuick Birthday Anniversary) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு பென்னிக் குயிக்கின் 182வது பிறந்தநாளையொட்டி, பென்னி குயிக் மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் பென்னிக் குயிக்கின் 182வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பென்னிகுயிக் அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி பெரியசாமி மரியாதை செய்தார்.

நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன், கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஜான் பென்னிகுயிக் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு அரசு தனது உரிமையை விட்டு தராது:பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, 'கர்னல் ஜான் பென்னிகுயிக்கு லண்டனில் அவர் பிறந்த மண்ணிலே அவருக்கு சிலை வைத்த பெருமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சேரும். தென் தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த ஜான் பென்னிகுயிக்கின் பெருமையை உலகம் அறிய செய்தவர் ஸ்டாலின் தான். முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீர் இருப்பை உயர்த்துவதற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதன்படி, கேரளா அரசிடம் இதுகுறித்து ஆலோசனை செய்து தமிழ்நாடு முதலமைச்சர் 152 அடியை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பார்.

முல்லைப் பெரியாறு அணையை 152 அடிவரை உயர்த்துவதற்க்கு தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. முல்லைப் பெரியார் குறுக்கே கேரளா அரசு புதிய அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு தன் உரிமையை விட்டுக் கொடுக்காது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பார்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'சிலம்பத்தில் தூள் கிளப்பிய மக்கள்' - ஈரோட்டில் கோலாகல கொண்டாட்டம்

ABOUT THE AUTHOR

...view details