தேனி: இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருபவர், தேனி மாவட்டம் கூடலுரைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் தர்மராஜ் (23). இவர் நேற்று (செப்.13) தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் கம்பத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் கூடலூர் நோக்கி வந்துள்ளார்.
அப்போது, கூடலூரில் இருந்து கம்பம் நோக்கி நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த ராஜேஷ் குமார்(33) என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். கூடலூர் துர்க்கை அம்மன் கோவில் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், ராஜேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.