தேனி மாவட்டம் பெரியகுளம் சாலையில் அன்னஞ்சி விலக்கு, மதுரை பைபாஸ் ரோடு, பழைய பேருந்து நிலையம் ஆகிய மூன்று இடங்களில் புதிய சிக்னல் பொருத்தப்பட்டுள்ளன. இதனை இன்று (அக்.22) சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து புதிய சிக்னல் பயன்பாட்டிற்கு வந்தன.
பின்னர், அவர் பொதுமக்களுக்கு முகக்கவசம், கரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.