தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போடி அருகே பெண்ணை தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்த கும்பல்!

தேனி: போடி அருகே திருமணமான பெண்ணிற்கு வங்கி வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தைக் காட்டி பாலியல் வல்லுறவு செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டிய கும்பலைச் சேர்ந்த இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளதனர்.

By

Published : Jun 11, 2019, 1:49 PM IST

File pic

தேனி மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தவரை கடந்த சில வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இப்பெண் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடக் கோரி புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், 'எனது கணவர் 2018ஆம் ஆண்டு கேரள மாநிலம் கொல்லத்திற்கு ஒப்பந்த வேலைக்காக சென்றார். அங்கிருந்து வேலை பார்க்கும் சம்பள பணத்தை குடும்ப செலவிற்காக வங்கி கணக்கில் அனுப்பிவைப்பார்.

இதற்காக சங்கராபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் புதிதாக சேமிப்புக்கணக்கு தொடங்கி எனது கணவர் அனுப்புகின்ற பணத்தை எடுத்துவந்து கொண்டிருந்தேன்.

இந்நிலையில், வங்கியில் பணிபுரியும் ஊழியரான போடியைச் சேர்ந்த முத்து சிவகார்த்திக் எனது ஏழ்மையை கேட்டறிந்து வங்கியில் வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை காட்டினார்.

பின்னர் வேலை சம்பந்தமாக வங்கி உயர் அலுவலர்களை சந்திக்க வேண்டும் எனக் கூறி 2018 ஆகஸ்ட் மாதம் கம்பம் பகுதியில் உள்ள தனியார் லாட்ஜிற்கு வரச்சொன்னார். அங்கு சென்றபோது வேலை கிடைக்க வேண்டுமெனில், தனது இச்சைக்கு இணங்குமாறு வற்புறுத்தி பாலியல் வன்புணர்வு செய்து அதனை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துகொண்டார்.

பாதிக்கப்பட்ட பெண்

தொடர்ந்து தனது ஆசைக்கு இணங்காவிட்டால் இந்த வீடியோவை எனது கணவர், ஊரார் அனைவருக்கும் பரப்பி விடுவதாக மிரட்டினார். மேலும் முத்து சிவகார்த்திக்கின் நண்பர்களான அன்பு, பாண்டி, சதீஷ், பெயர் தெரியாத மூன்று போ் இந்த வீடியோவை காட்டி மிரட்டியதோடு எனது வீட்டிற்கே வந்து பலமுறை பாலியல் வன்புணர்வு செய்தனர்.

மேலும் தனியார் விடுதியில் வைத்தும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினார்கள். இந்த விவரத்தை எனது உறவினரான ஈஸ்வரனிடம் தெரிவித்தேன். அனைத்தையும் கேட்டறிந்தவர், எனக்கு உதவ வேண்டுமென்றால் அவரது இச்சைக்கும் இணங்க என்னை வற்புறுத்தினார்.

2018 ஜூலை மாதம் தொடங்கி டிசம்பர் வரை என்னை 12 பேர் பாலியல் வன்புணர்வு செய்தனர். கடைசியாக இது குறித்து எனது கணவரிடம் கூறினேன். அவர் எனக்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறினார்.

எனது கணவர், குழந்தைகளை இழந்து சமுதாயத்தில் புறக்கணிக்கப்படுவேனோ என அஞ்சி இது நாள் வரை காலம் தாழ்த்தி வந்தேன். எனவே உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எனக்கு தொந்தரவு அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தக்க தண்டனை அளித்திட வேண்டும்' என அதில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், "2018 டிசம்பரில் போடி தாலுகா காவல் நிலையத்தில் எனக்கு அளிக்கப்பட்ட கொடுமைகள் குறித்து புகார் அளித்தோம். வாழ்க்கை பாழாகி விடும் என்று விசாரணை அலுவலர்கள் மிரட்டினர். தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டி காவல் துறையினரால் அலைக்கழிக்கப்பட்டோம்.

இதனால் சங்கராபுரத்தை விட்டு வெளியேறி, தற்போது தேவாரம் காவலர் குடியிருப்பு அருகே வசித்துவருகின்றோம். மேலும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தோம்" என்றார்.

அதனடிப்படையில், போடி மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் வங்கியைச் சேர்ந்த முத்துசிவகார்த்திக், சிலமலையை சேர்ந்த ஈஸ்வரன், ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் சதீஷ், பாண்டி, ராஜபார்த்திபன் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். திருமணமான பெண்ணின் ஏழ்மை நிலையை சாதகமாக்கி தொடர்ந்து அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details