தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேற்குத் தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ - அரியவகை மூலிகை மரங்கள் எரிந்து நாசம்

தேனி: பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்துவருவதால் அரிய வகை மூலிகை மரங்கள், உயிரினங்கள் தீயில் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

theni
theni

By

Published : Feb 16, 2020, 10:47 PM IST

Updated : Feb 17, 2020, 9:41 AM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் கோடை காலங்களில் மட்டுமே காய்ந்த மரங்களின் உராய்வினால் காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். ஆனால் தற்போது சற்று பனிப்பொழிவிருக்கும் காலத்திலேயே எதிர்பாராதவிதமாக தீப்பற்றியுள்ளது. பெரியகுளம் தைலாராமன் வனப்பகுதிகளில் சுமார் 50 ஏக்கருக்கும் மேல் தீப்பிடித்துள்ளது.

பெரியகுளம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டுத்தீ

அதனால் அங்குள்ள விலை உயர்ந்த மரங்கள், அரிய வகை மூலிகை செடிகள் காட்டுத் தீயினால் எரிந்து சாம்பலாகி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் பல்வேறு உயிரினங்களும் தீயில் சிக்கி கருகிவருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவந்து ஆபத்திலிருக்கும் உயிரினங்களையும், அரிய வகை மரங்களையும் பாதுகாக்குமாறு சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்தினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:இரும்பு கடையில் தீ விபத்து- ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்

Last Updated : Feb 17, 2020, 9:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details