தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே வனப்பகுதிகளில் அவ்வப்போது காட்டுத் தீ பற்றி எரிந்துவருகின்றது. இதனால் வனங்களின் வளம் அழிவதோடு, அங்கு வாழ்கின்ற உயிரினங்களின் வாழ்விடமும் பாதிக்கப்பட்டு அவைகள் வேறு இடத்திற்கு இடம்பெயரும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் முயற்சிகள் மேற்கொண்டும் அவை தோல்வியிலே முடிந்து வருகின்றன.
மேற்குத்தொடர்ச்சி மலையில் காட்டூத் தீ; வனவிலங்குகள் பாதிப்பு! - அரியவகை மரங்கள் நாசம்
தேனி: பெரியகுளம் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் அரிய வகை மரங்கள் எரிந்து நாசமாகின.
இந்நிலையில் பெரியகுளம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டியுள்ள அடுக்கம் வனப்பகுதியில் நேற்று காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதனால் பல ஏக்கர் பரப்பளவு வனத்தில் உள்ள பல அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைச்செடிகள் எரிந்து நாசமாகின. வன விலங்குகள் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டன.
கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் வனத்தில் பற்றி எரியும் காட்டுத்தீயானது மளமளவென கொழுந்துவிட்டு எரிகிறது. நீண்ட நேரமாக வனத்துறையினர் தீவிரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை, சிறப்பு அக்கறை செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.