குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் உட்பட எதிர்க்கட்சிகள் மற்றும் பலதரப்பட்ட மக்கள் சார்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட உலா மக்கள் சபை, தேனி மாவட்ட ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு மற்றும் தேனி மாவட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக குடி உரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்த மத்திய அரசிற்கும், பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், இந்த சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த பாஜக மற்றும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களைக் கண்டித்தும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.