தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுயேச்சை வார்டு உறுப்பினரை கடத்த முயற்சி; கட்சியினரிடையே மோதல் - போலீஸ் தடியடியால் பதற்றம் - Selvaramani Selvaraj

தேனி: பெரியகுளம் அருகே ஊராட்சி மன்றத் துணை தலைவர் பதவியை தக்கவைக்க சுயேட்டை வார்டு பெண் உறுப்பினரை அதிமுகவினர் அழைத்துச் சென்றதால் அதிமுக, திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது.

theni
theni

By

Published : Jan 6, 2020, 8:42 PM IST

பெரியகுளம் அருகே உள்ள கீழ வடகரை ஊராட்சி மன்றத் தேர்தலில், தலைவர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிட்ட செல்வராணி செல்வராஜ் என்பவர் வெற்றிபெற்றிருந்தார். இந்நிலையில், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவியை அதிமுகவினர் தக்கவைத்துக்கொள்ள, ஏழு வார்டு உறுப்பினர்கள் தேவைப்பட்ட நிலையில், ஐந்து வார்டு உறுப்பினர்கள் மட்டுமே அவர்களிடம் இருந்தனர்.

இதனால் எதிரணியில் இருக்கும் வார்டு உறுப்பினரை பதவிஏற்பு நிகழ்ச்சி முடிந்தபின்பு, கடத்திச் செல்லவிருப்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

சுயேச்சை உறுப்பினரை அழைத்துச்செல்ல முயன்றதால் பதற்றம்

இதனிடையே பதவிஏற்பு நிகழ்சி முடிவுற்ற பின்பு, திமுக பக்கம் இருந்த ஏழாவது வார்டு பெண் உறுப்பினரான ஜெயராணியை அதிமுகவினர் அழைத்துச் சென்றனர். இதனால் திமுக, அதிமுகவினரிடையே மோதல் உண்டாகி ஒருகட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனைத் தடுக்க கூட்டத்தில் லேசான தடியடி நடத்தி காவல் துறையினர் கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதையும் படிங்க: பதவியேற்பு விழாவில் மரக்கன்றுகளைப் பரிசளித்த ஊராட்சித் தலைவர்!

ABOUT THE AUTHOR

...view details