தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வதைத்துள்ளது. இந்நிலையில், இன்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டே வெளியேற முடியாத நிலையில் இருந்தனர்.
பின்பு, மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு கனமழை பெய்யத்தொடங்கியது. இந்தக் கனமழையானது தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பழனிசெட்டிபட்டி, கருவேல்நாயக்கன்பட்டி, அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி, லட்சுமிபுரம், கைலாசபட்டி, ஜக்கம்பட்டி, பிச்சம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் புவியின் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது.