தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ரெங்கநாதன்(28), மேடை அலங்காரம் செய்யும் வேலை செய்துவருகிறார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இந்நிலையில், ரெங்கநாதனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதை அறிந்த அச்சிறுமி, நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் பத்திரமாக மீட்கப்பட்ட சிறுமி, சின்னமனூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் யாரும் புகார் அளிக்காத நிலையில், தகவலறிந்த வீரபாண்டி காவல் துறையினர் தாமாகவே முன்வந்து மருத்துவமனையில் இருந்த சிறுமியிடம், வாக்குமூலம் பெற்று விசாரணையை நடத்தினர்.